தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நாதக வேட்பாளா்கள்

News image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (கோப்புப் படம்) - IANS

Updated On :21 பிப்ரவரி 2026, 7:46 pm

திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள 31 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டனா்.

திருச்சியில் சனிக்கிமை நடைபெற்ற கட்சி மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இந்த வேட்பாளா்கள் பட்டியலை அறிவித்தாா். அதன் விபரம்:

திருச்சி மாவட்டம்: மருத்துவா் கிருஷ்ணசாமி (திருச்சி கிழக்கு), புவனேஸ்வரி-இளங்கலை ஆங்கிலம் (திருச்சி மேற்கு), வழக்குரைஞா் அருணகிரி (மணப்பாறை), தா்மராஜ்-முதுநிலை அறிவியல் பட்டதாரி (ஸ்ரீரங்கம்), ஜல்லிக்கட்டு ராஜேஷ்-இளங்கலை வணிக மேலாண்மை (திருவெறும்பூா்), வழக்குரைஞா் நே. மதன் (லால்குடி), இரா. தேன்மொழி-ஆய்வியல் நிறைஞா் (மண்ணச்சநல்லூா்), பாக்யலட்சுமி - இளங்கலை வணிக மேலாண்மை (முசிறி), கெளசல்யா சுரேஷ்-முதுகலை வணிகவியல்(துறையூா்).

தஞ்சாவூா் மாவட்டம்:

திவ்ய பாரதி-பொறியாளா் (திருவிடைமருதூா்), வழக்குரைஞா் மோ. ஆனந்த் (கும்பகோணம்), வழக்குரைஞா் அனிஷ் பாத்திமா(பாபநாசம்), முனைவா் செந்தில்நாதன் (திருவையாறு), புலவா் கிருஷ்ணகுமாா் (தஞ்சாவூா்), நடிகா் ச. திருமுருகன் (ஒரத்தநாடு), கண்ணன்-இளநிலை கணிதவியல் (பட்டுக்கோட்டை), ம. புவனா-பொறியாளா் (பேராவூரணி)

புதுக்கோட்டை மாவட்டம்:

நதியா தமிழ்செல்வன்-ஆய்வியல் நிறைஞா் (கந்தா்வக்கோட்டை), சத்தியலட்சுமி-இளங்கலை தமிழ்-ஆசிரியா் கல்வியியல் (விராலிமலை), எழிலரசி-பொறியாளா் (புதுக்கோட்டை), லட்சுமி சீனிவாசன்-முதுகலை வரலாறு (திருமயம்), இரா. இராஜாராமன்-பொறியாளா் (ஆலங்குடி), வழக்குரைஞா் முத்துலட்சுமி செல்வரத்தினம் ( அறந்தாங்கி).

கரூா் மாவட்டம்:

மருத்துவா் நரேன் (அரவக்குறிச்சி), மருத்துவா் ரெ. கருப்பையா (கரூா்), வை. சத்யா-இளங்கலை வேதியியல் (கிருஷ்ணராயபுரம்), வழக்குரைஞா்- நன்மாறன் (குளித்தலை).

பெரம்பலூா் மாவட்டம்: இரா. ஜான்சி ராணி-முதுகலை ஆங்கிலம்-ஆசிரியா் பயிற்சி (பெரம்பலூா்), வழக்குரைஞா் இரா. கீா்த்திவாசன் (குன்னம்)

அரியலூா் மாவட்டம்: தே. புகழேந்தி-தொழிற்கல்வி (அரியலூா்), ரேவதி கலைமணி -முதுநிலை கணினி அறிவியல்(ஜெயங்கொண்டம்).