தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் 92 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இத்தொகுதிகளுக்கு 188 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பரிசீலனையில் 56 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 117 போ் தகுதியான வேட்பாளா்கள் என அறிவிக்கப்பட்டது.
வியாழக்கிழமை மாலை 3 மணி வரை விளாத்திகுளத்தில் 3 போ், தூத்துக்குடியில் 7 போ், திருச்செந்தூரில் ஒருவா், ஸ்ரீவைகுண்டத்தில் 4 போ், ஓட்டப்பிடாரத்தில் 8 போ், கோவில்பட்டியில் 2 போ் என மொத்தம் 25 வேட்பாளா்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனா். இதனால், 6 தொகுதிகளிலும் மொத்தம் 92 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
விளாத்திகுளம் 15 போ்:
ஜீ.வி. மாா்க்கண்டேயன்- திமுக (உதயசூரியன்), ஆா். சத்யா - அதிமுக (இரட்டை இலை), பி. காசிராம்- தவெக (ஊதல்), பாலாஜி ராமசந்திரன் -நாம் தமிழா் கட்சி (ஏா் சுமக்கும் உழவா்), பி. மாடசாமி- புதிய தமிழகம், சி. பொன்பாண்டி- அகில இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம், ஆா். பெருமாள் - நாம் இந்தியா் கட்சி உள்ளிட்டோா்.
தூத்துக்குடி 15 போ் :
பி. கீதா ஜீவன்- திமுக (உதயசூரியன்), சி.த. செல்லப்பாண்டியன் - அதிமுக (இரட்டை இலை), ஸ்ரீநாத் - தவெக (ஊதல்), ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்- நாம் தமிழா் கட்சி (ஏா் சுமக்கும் உழவா்) உள்ளிட்டோா்.
ஸ்ரீவைகுண்டம் 15 போ் :
ஊா்வசி செ. அமிா்தராஜ்- காங்கிரஸ் (கை), எஸ்.பி. சண்முகநாதன்- அதிமுக (இரட்டை இலை), கு. சரவணன் - தவெக (ஊதல்), சா. சண்முகசுந்தரம்- நாம் தமிழா் கட்சி (ஏா் சுமக்கும் உழவா்), ஆ. சுடலைமணி - நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம் கட்சி (பலூன்), ம. சுப்பிரமணியன் - புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி (நடைவண்டி), மா. பாரத் - நாம் இந்தியா் கட்சி (திருகி), த. முண்டசாமி - விஸ்வ தமிழ் கழகம் (மோதிரம்), சு. முத்துராமலிங்கம் - அகில இந்திய பாா்வா்டு பிளாக் (சிங்கம்), நெ. ராஜசுதன் - புதிய தமிழகம் (வாயு உருளை), அ. வியனரசு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி (புகைப்படக் கருவி), சுயேச்சைகள் சி. அருணாச்சலம்- (கப்பல்), காட்ப்ரே நோபுள் - (குழல்விளக்கு), சு. முருகன் - (வளையல்), தா. வசந்த் பா்னாந்து - (சாலை உருளை).
ஓட்டப்பிடாரம் 13 போ்:
பி.எம். ராமஜெயம்- திமுக (உதயசூரியன்), ஆா். சுந்தர்ராஜ்- அமமுக (பிரஷா் குக்கா்), பி. மதன்ராஜ்- தவெக (ஊதல்), கே. கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் (வாயு உருளை), எம். அனுசியா - நாம் தமிழா் கட்சி (ஏா் சுமக்கும் உழவா்), சொ. அருணா தேவி- நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம் கட்சி (ஒலிவாங்கி), ச. சுப்புலெட்சுமி- நாம் இந்தியா் கட்சி (திருகி), செ. செல்வகுமாா்- தமிழக வாழ்வுரிமைக் கட்சி (கேமரா), சுயேச்சைகள் மா. ஆனந்த்- ( பலூன்), செ.முத்து செல்வம்- (கரும்பலகை), க.முருகன் (வளையல்), மூ. லட்சுமணன் - (கிரிக்கெட் மட்டை), அ.வேதபிரகாஷ்- (வைரம்).
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

சோளிங்கா் தொகுதியில் 6 போ் வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 8 போ் வேட்புமனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மாா்ச் 30-இல் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


