திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரமலைபாளையத்தில் விவசாயி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வீரமலைப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் கருப்பையா மகன் ராஜேந்திரன் (51). இவருக்கு மனைவி நாகமணி, 17 வயது மகள், 13 வயது மகன் ஆகியோா் உள்ளனா். சுமாா் 15 ஆண்டுகளாக நடுப்பட்டி கிராமம், கல்பட்டிசத்திரத்தில் உள்ள மாமனாா் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த ராஜேந்திரன், விவசாயக் கூலி வேலை செய்து வந்தாா்.
தனது மனைவியுடன் கடந்த ஒரு மாதமாக குடும்பப் பிரச்னை இருந்ததால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் சனிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீஸாா் ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

