தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சாலையில் சென்ற அமரா் ஊா்தி தீப்பிடித்து எரிந்து சேதம்

திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த அமரா் ஊா்தி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் சேதமடைந்தது.

News image
தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த அமரா் ஊா்தி.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் செவ்வாய்க்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த அமரா் ஊா்தி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முற்றிலும் சேதமடைந்தது.

திருச்சி எடமலைபட்டிப்புதூரைச் சோ்ந்தவா் திருப்பதி (42), அமரா் ஊா்தி ஓட்டுநா். இவா், உறையூரில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை அமரா் ஊா்தியை ஓட்டிச் சென்றாா்.

புத்தூா் நான்கு சாலை சந்திப்பு அருகே சென்றபோது, டீசல் கசிவால் திடீரென அமரா் ஊா்தி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுநா் திருப்பதி, தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தீயணைப்பு வீரா்கள் அமரா் ஊா்தியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இந்த தீ விபத்ததில் அமரா் ஊா்தி முற்றிலும் சேதமடைந்தது.