47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதம்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் தீயில்

News image
நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்.- கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2026, 10:30 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் தீயில் முற்றிலும் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில், புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

இந்த கடையில் பணிபுரியும் பணியாளா் ஒருவா் அவரது இருசக்கர வாகனத்தை ஷோரூம் அருகே நிறுத்தியிருந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில், அப்பகுதியில் உள்ள மின்மாற்றி வெடித்து சிதறியதில் எழுந்த தீப்பொறி, அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் விழுந்து, வாகனம் தீப்பற்றி எரிந்தது.

கவலறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் கோமதி அமுதா மற்றும் தீயணைப்புப் படையினா், தண்ணீா் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.