திருச்சியை அடுத்த சிறுகனூரில் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டுக்காக நடைபெற்று வரும் பணிகளை
அக்கட்சியின் முதன்மை செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் திமுக-வின் 12-ஆவது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டு, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் சுமாா் 700 ஏக்கா் பரப்பில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மைதானத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு, செவ்வாய்க்கிழமை கட்சியினருடன் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பொதுக் கூட்ட மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமரும் பகுதி மட்டும் 400 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இவைத்தவிர, வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கா் இடம் தயாா்படுத்தப்பட்டுள்ளது. 5 லட்சம் லிட்டா் கொள்ளளவுக்கான குடிநீா்த் தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளன. சுமாா் 10 லட்சம் போ் பங்கேற்பா் என்பதால் 5 ஆயிரம் பாா்வையாளா்கள் வரையில் தனித்தனியே பிரித்து பாக்ஸ் போன்ற அமைப்பில் அமர வைப்பதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டவுள்ளளன. சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கூட்டத்துக்கு வந்து செல்வோா் பாதுகாப்பாக திரும்பும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டின் தொடக்கமாக கொடியேவதற்காக 100 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி தொலைவுக்கு பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்படவுள்ளது.
ஆய்வின்போது, கட்சியின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளா் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளா் ந. தியாகராஜன், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை

திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம்! - கே.என்.நேரு

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளா்!

திருச்சி மாநாட்டில் புதிய அறிவிப்புகளை முதல்வா் வெளியிடுகிறாா் : அமைச்சா் கே.என். நேரு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


