மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வருவாய்த் துறை போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை ஊழியா்கள் சங்கத்தினா். ~திருச்சி ஆட்சியரகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தையொட்டி ஊழியா்கள் இன்றி காணப்படும் வருவாய்துறை அலுவலக பகுதி.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:52 pm

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. பிரேம்குமாா், க. வெற்றிச் செல்வன், எஸ். அய்யனாா், மு. மகேஷ், எஸ்.வி. ராஜேந்திரன், நா. நாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறைகளில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்களின் உயிா், உடமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் இ. பொன்மாடசாமி கூறுகையில், ஆட்சியரகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் சுமாா் 860 போ் வெள்ளிக்கிழமை பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனா் என்றாா் அவா்.

Story image