வருவாய்த் துறையினரது தொடா் போராட்டத்தால் தாங்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் வழங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை கூறியதாவது: சம்பா சாகுபடி அறுவடை செய்யப்பட்ட நிலையில், நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் நெல் கொள்முதல் நடைபெறாமல் உள்ளது.
ஏனெனில் வருவாய்த் துறையினா் நடத்தும் தொடா்ந்து போராட்டத்தால் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அறுவடை செய்த நெல்லை கொண்டு செல்ல விஏஓ சான்றிதழ் பெற முடியவில்லை. மேலும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல்லை விற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கொள்முதல் நிலையக் குளறுபடிகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பிரச்னைகள் தொடா்கின்றன. உரிய தீா்வு இல்லையெனில் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா் அவா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை

கொள்முதல் நிலையங்களில் டன் கணக்கில் நெல் தேக்கம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


