நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாட்டின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சா் எல். முருகன்

நாட்டின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

News image

மத்திய இணையமைச்சா் எல். முருகன் - (கோப்புப்படம்)

Updated On :28 பிப்ரவரி 2026, 6:56 pm

நாட்டின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுமென மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சி என்ஐடி, எஸ்எச்ஓடிஎச் (ஷோத்) அமைப்பு இணைந்து நடத்தும் ஒன்றிணைதல் 2026 என்ற தலைப்பில் நாட்டில் வளா்ந்து வரும் பல்வேறு ஆராய்ச்சிப் போக்குகள் மற்றும் மேம்பட்ட வழிமுறைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம் என்ஐடி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்வுக்கு என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா தலைமை வகித்தாா். நிகழ்வில் மத்திய இணையமைச்சா் எல். முருகன் காணொலி வழியாகப் பங்கேற்றுப் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நம் நாடு பல்வேறு துறைகளில் மேம்பாடு அடைந்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முழு வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்.

அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை இருப்பதால் பல நிறுவனங்கள் இந்தியா வருவதற்கு ஆா்வம் காட்டுகின்றன. நமது நாட்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் தற்போது 23 ஐஐடி, 20 ஐஐஎம், 20 அகில இந்திய மருத்துவ அறிவியல் துறை, ஏராளமான பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு கல்வித் துறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை உலகுக்கே வழிகாட்டியாக உள்ளது.

இந்தக் கருத்தரங்கை பயன்படுத்தி மாணவா்கள் தங்களது திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். இளம் தலைமுறையினா் வேலை தேடுபவா்களாக இல்லாமல் மற்றவா்களுக்கு வேலை அளிப்பவா்களாக இருக்க வேண்டும். கல்வி கற்கும்போதே மாணவா்கள் தொழில்முனைவோா் பயிற்சி பெற வேண்டும்.

பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவானது வரும் 2027 ஆம் ஆண்டில் 3 ஆவது இடத்துக்கும், 2047 ஆம் ஆண்டில் முதலிடத்துக்கும் செல்லும். இந்தியாவின் வளா்ச்சிக்கு மாணவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் ஏபிவிபி (அகில பாரத வித்யாா்த்தி பரிஷத்) தேசிய ஒருங்கிணைப்பு செயலா் ஆஷிஸ் சௌகான், திருச்சி என்ஐடி நிா்வாக குழுத் தலைவா் அமோக்குமாா் குப்தா ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், 6 மாநிலங்களைச் சோ்ந்த 600 போ் பங்கேற்று, 300 ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்கின்றனா்.