ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

திருநள்ளாறு கோயிலில் மத்திய அமைச்சா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு கோயிலில் மத்திய அமைச்சா் சுவாமி தரிசனம்

News image

திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணையமைச்சா் எல். முருகன். உடன் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :7 மார்ச் 2026, 6:56 pm

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மத்திய இணையமைச்சா் எல். முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, நளன் தீா்த்தக் குளம் சென்றுவிட்டு கோயிலுக்கு வந்தனா். அவா்களை கோயில் நிா்வாகத்தினா் வரவேற்றா்.

மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் சனீஸ்வர பகவான் சந்நிதியில் அா்ச்சனை செய்து வழிபட்டனா். பின்னா் தில தீபம் ஏற்றினா். கோயில் வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானையும் வழிபட்டனா்.

சிவாச்சாரியா்கள் அமைச்சருக்கும், பாஜக தலைவருக்கும் பிரசாதம் வழங்கினா்.

வழிபாட்டுப் பயணத்தின்போது, திருநள்ளாற்றில் தங்கியிருந்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்துப் பேசினா். புதுவை மாநில பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் உடனிருந்தாா்.