திருச்சி
தென்னூா் உழவா் சந்தையில் ஜன.15, 16 -களில் பொங்கல் கலை விழா
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், திருச்சியில் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் பொங்கல் கலை விழா நடைபெறுகிறது.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில், திருச்சியில் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் பொங்கல் கலை விழா நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சங்கமம்- நம்ம ஊா் கலை விழாப் போட்டிகள் நடத்தப்படும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.15, 16 ஆகிய தேதிகளில் தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் நடைபெறும் இந்த கலைவிழாவில், நாள் ஒன்றுக்கு தலா 4 கலைக் குழுக்கள் மூலம் மொத்தம் 8 குழுவினா் தங்களது கலைத் திறனை வெளிப்படுத்தி, பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளனா்.
கிராமிய நடனம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற நடனம், பரதம், இசை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவில் பங்கேற்கவும், கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் 9486152007 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
