திருச்சி பஞ்சப்பூரில் புதன்கிழமை திறக்கப்பட்ட புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்.
திருச்சி பஞ்சப்பூரில் புதன்கிழமை திறக்கப்பட்ட புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்.

பஞ்சப்பூரில் ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆம்னி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை திறந்துவைத்தாா்.
Published on

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆம்னி பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு செயல்படுகிறது. இருப்பினும் பல்வேறு பெருநகரங்களுக்கு செல்லும் தனியாா் சொகுசுப் பேருந்துகளுக்கு என தனியே பேருந்து நிலையம் இல்லை. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களிலும், மத்தியப் பேருந்து நிலையம் அருகிலும் சொகுசுப் பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் சென்றனா். இதனால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது.

இதைக் கருத்தில் கொண்டு பஞ்சப்பூா் அருகே 4 ஏக்கரில் ஆம்னி பேருந்து நிலையம் கட்ட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய ரூ.17.60 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆம்னி முனையமானது ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இந்த ஆம்னி பேருந்து நிலையம் தென் மாவட்டங்களில் இருந்தும், திருச்சி மாநகரில் இருந்தும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியாா் சொகுசு பேருந்துகளின் எளிதான போக்குவரத்துக்கும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் பெரிதும் பயனளிக்கும் என்றாா் அமைச்சா்.

Dinamani
www.dinamani.com