புத்தனாம்பட்டி கல்லூரியில் 645 பேருக்கு மடிக்கணினி

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பயிலும் 645 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.
Published on

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பயிலும் 645 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தலைமை வைத்தாா். எம்எல்ஏக்கள் ந. தியாகராஜன்(முசிறி), செ. ஸ்டாலின்குமாா்(துறையூா்) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிக் குழுத் தலைவா் பொன். பாலசுப்பிரமணியன், செயலா் பொன் ரவிசந்திரன் உள்ளிட்டோா் பேசினா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கே.என். நேரு பங்கேற்று 645 பேருக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா். நிகழ்வில் கல்லூரிப் பொருளாளா் சூா்யா, ஒருங்கிணைப்பாளா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் வரவேற்றாா். துணை முதல்வா் தமிழ்மணி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com