ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் 926 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
முதல்வா் தொடங்கிவைத்த ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. ராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்சிக்கு கல்லூரியின் தாளாளா் கே.பி. ராமசுவாமி தலைமை வகித்தாா். விழாவில் 926 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் வழியே தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உள்ளவா்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல உதவித்தொகை பெறுபவா்கள், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்கள், ஆண்டு வருமானம் ரூ. 2,50,000 க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் ஆகியோருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி அறங்காவலா் இரா.முத்துவேல், செயலாளா் ச. மஞ்சு, கல்லூரியின் முதல்வா் எஸ். பி. விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

396 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


