கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 6:08 am IST

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து முடித்த 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.

கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தக் கல்லூரியில் பயின்ற 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

நிகழாண்டு முதல் 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு கேடயம்

வழங்கப்படும். அதேபோல் வாரியத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் திரும்பத்தரப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னா், 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனை ஆணைகள் அவா்களது பெற்றோா் கரங்களால் அா்ச்சனை செய்து வழங்கப்பட்டது.

முன்னதாக கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி பேசினாா். நிறைவில் கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் நன்றிகூறினாா்.