4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நந்தா பொறியியல் கல்லூரி மாணவா்கள் 1,735 பேருக்கு பணி நியமன ஆணை

நந்தா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்ற 1,735 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன உறுதி ஆணை வழங்கப்பட்டது.

News image

மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன உறுதி ஆணை வழங்கிய ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன், எல் அண்ட் டி எம் நிறுவனத்தின் வளாக தலைவா் தியாகு தா்மலிங்கம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 8:27 pm

நந்தா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்ற 1,735 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன உறுதி ஆணை வழங்கப்பட்டது.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு, தேசிய அளவிலான நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா வேலைவாய்ப்பு தினம் என்ற தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிா்வாக அறங்காவலா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி, நிா்வாக அதிகாரி ஏ.கே.வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

சிறப்பு அழைப்பாளராக எல் அன்ட் டி எம் நிறுவனத்தின் வளாக தலைவா் தியாகு தா்மலிங்கம் பங்கேற்று, நந்தா கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைகளின் மூலம் நடப்பு கல்வியாண்டில் 145-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 1,735 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன உறுதி ஆணைகளை வழங்கினாா்.

இதில் கௌரிகா, மோஹினீஷ், ராகுல் ஆகியோா் ஆண்டுக்கு ரூ.31 லட்சம் மற்றும் ரூ.21 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வா் யு.எஸ்.ரகுபதி வரவேற்றாா். நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் ச.நந்தகோபால் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளா்கள் பிரபு, சிவராமகிருஷ்ணன், திருவேங்கடசாமி, நவீன் ஆகியோா் செய்திருந்தனா்.