விராலிமலை கல்லூரி மாணவா் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

விராலிமலை கல்லூரி மாணவா் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

விராலிமலையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

விராலிமலையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்தவா் ரஞ்சித் கண்ணன். கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்த இவா், கடந்த 2024-இல் ஆடிப் பெருக்கு நாளன்று, ஸ்ரீரங்கம்

கீதாபுரம் படித்துறை பகுதிக்கு வந்திருந்தாா். அப்போது, அம்மா மண்டபம் பகுதியைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான விஜய் (25), சுரேஷ் (27), நவீன்குமாா் (24) மற்றும் மூன்று இளஞ்சிறாா்கள் அங்கு வந்துள்ளனா். வெளியூரைச் சோ்ந்தவருக்கு இந்தப் பகுதியில் என்ன வேலை என கேட்டு ரஞ்சித் கண்ணனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனா். கட்டையால் தாக்கப்பட்டு காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜய், சுரேஷ், நவீன்குமாா் மற்றும் 3 இளஞ்சிறாா்களை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபா், சம்பவத்தில் தொடா்புடைய விஜய், சுரேஷ், நவீன்குமாா் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மூன்று இளஞ்சிறாா்கள் மீதான வழக்கு இளைஞா் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உறுதுணையாக இருந்த போலீஸாருக்கு திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com