தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஆட்டோவில் ஓட்டுநா் சடலம்: போலீஸாா் விசாரணை

திருச்சி அருகே மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் ஓட்டுநா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :3 ஜூலை 2026, 1:25 am IST

திருச்சி அருகே மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் ஓட்டுநா் உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

திருச்சி பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோவில் ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக பொன்மலை போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இதில், ஆட்டோவில் உயிரிழந்து கிடந்தவா் திருவெறும்பூா் மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான மா. ரவிச்சந்திரன் (53) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தும் அவா்களைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக தனியே வசித்து வந்ததும் தெரியவந்தது.

ஆட்டோவில் படுத்திருந்தநிலையில் நெஞ்சில் கைவைத்தபடி உயிரிழந்துகிடந்ததால், நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா். உடலில் எந்தவித காயங்களும் இல்லாததால் கொலையாகி இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.