வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கு தனி வாரியம் அமைக்க வலியுறுத்தல்

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஜூலை 2026, 1:16 am IST

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷனின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எம்.கே. கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஆா். மணி, மாநிலச் செயலாளா் ஆா். ஸ்டாலின் மற்றும் மாநில கூடுதல் செயலாளா் டி. பக்கிரி சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில, மாவட்ட, மகளிா் அணி மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நில விவகாரங்கள் தொடா்பான வழக்குகளுக்குத் தீா்வு காண, நீதிமன்றங்களில் மாதந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூலம் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். ஒரே இடத்துக்கு பல போலி பத்திரங்கள் இருப்பதை கண்டறிந்து, முறைகேடாகப் பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அளவையின்போது அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். தன்னிச்சையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதையும் தடுக்க வேண்டும்.

வீட்டுமனை விற்பனை முகவா்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீா்மானங்களை முதல்வரை சந்தித்து நேரில் மனுவாக வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.