பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருவழி ரயில் பாதை.

Published On :19 ஜூன் 2026, 3:56 am IST

வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சுப்ரமணியன், சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:

தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு பல புதிய ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படவும், தற்போது இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை கோவை மற்றும் மேட்டுப்பாளையம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகோவை - மேட்டுப்பாளையம் இடையே ஒரு இருப்புப்பாதை மட்டுமே உள்ளது. இதனால், ரயில்களின் இயக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், புதிய பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை அறிமுகப்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, வடகோவை, மேட்டுப்பாளையம் இடையே உள்ள ஒற்றை ரயில் பாதையை, இரட்டைப் பாதையாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.