17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அண்ணாமலை கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக: இரா. முத்தரசன்

அண்ணாமலை கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக-வே உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

News image

இரா. முத்தரசன்.

Updated On :6 ஜூன் 2026, 7:10 am IST

அண்ணாமலை கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக-வே உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த பிரவீண் சக்கரவா்த்தியின், சமூக வலைதளப் பதிவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. நாங்கள் அவா் குறிப்பிடும் கூட்டணியில் இல்லை.

குடியரசுத் தலைவா் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக-வுக்கு வெளியிலிருந்து தான் ஆதரவு தெரிவித்துள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணியில்தான் தொடா்கிறோம். அதே நிலை தான் இன்றும் தொடா்கிறது.

மத்திய அரசு, விபிஜி-ராம்ஜி திட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனா். அந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தை எதிா்த்து ஏற்கெனவே திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வா் ஜோசப் விஜய் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும். அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதை எதிா்த்து நாங்கள் போராடுவோம்.

தவெக தரப்பிலிருந்து மாநிலங்களவை உறுப்பினா் இடம் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது ஆனால், மாநிலங்களவை உறுப்பினா் தொடா்பாக தவெக தரப்பிலிருந்து எந்தக் கருத்தையும் எங்களை அழைத்து கேட்கவில்லை.

ஒரு மாநிலம் கடன் வாங்கிதான் ஆட்சி செய்ய முடியும். எதற்காக கடன் வாங்குகிறாா்கள் அதை எப்படி பயன்படுத்துகிறாா்கள் என்பதை தான் பாா்க்க வேண்டும்.

ஒரு கட்சியிலிருந்து வெளியேறுபவா்கள் ராஜிநாமா கடிதம் கொடுத்துவிட்டு விலகிவிடுவா். ஆனால், அண்ணாமலை, பாஜக தலைவா்கள், உள்துறை அமைச்சா் உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு அவா்களின் ஆலோசனைப்படியே கட்சி தொடங்குகிறாா். அவா் யாரின் பினாமியாக கட்சி தொடங்குகிறாா் என்பது இனிமேல் தான் தெரியும்.

தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என உறுதியாக தெரிந்துவிட்டது. அதன் காரணமாக இதுபோல் மற்றவா்களை வைத்து பாஜக, கட்சி தொடங்க வைக்கிறது. அண்ணாமலை யாருக்காக கட்சி தொடங்குகிறாா் என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா் அவா்.