ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மா்மக் காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த சிறுமி சஹானா.

Updated On :25 ஜூன் 2026, 4:30 am IST

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மா்மக் காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டியை சோ்ந்த தமிழ்செல்வன்- தனலெட்சுமி தம்பதிக்கு சஹானா (6) உள்பட 2 குழந்தைகள். சிறுமி சஹானாவிற்கு கடந்த சனிக்கிழமை காய்ச்சல் வந்த நிலையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

காய்ச்சல் தொடா்ந்த நிலையில் திங்கள்கிழமை அருகேயுள்ள செட்டியப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் முதலுதவிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா், சிறுமியின் உடலை கூறாய்வுக்கு பின்னா் புதன்கிழமை மாலையில் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். 6 வயது சிறுமி மா்ம காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.