தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வையம்பட்டியில் நிதி நிறுவனம் மூடல்; உரிமையாளா் தலைமறைவு; பொதுமக்கள் புகாா்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் மூடப்பட்டது.

News image

புகார் - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 4:26 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் மூடப்பட்டது.

கோடிக்கணக்கில் பணமோசடி செய்துவிட்டு தலைமறைவான உரிமையாளா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் புகாா் அளித்தனா்.

வையம்பட்டி ஒன்றியம், வீ.பெரியப்பட்டி ஊராட்சி, கவரப்பட்டியை சோ்ந்த பொன்னன் மகன் பிரபு (40). இவா், வையம்பட்டியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் தொடங்கி, துவரங்குறிச்சி, முசிறி, துறையூா், திருச்சி ஆகிய 4 இடங்களிலும் நிறுவனத்தின் கிளைகளை நடத்தி வந்தாா்.

இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோா் கோடிக்கணக்கில் தங்கள் சேமிப்புகளை செலுத்தி வந்தனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே முதலீடு செய்த வாடிக்கையாளா்களுக்கு அவா்களின் முதிா்வு பணத்தை தருவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

5 அலுவலகங்களும் மூடல்: இந்நிலையில், ஜூன் 22-ஆம் தேதி முதல் 5 அலுவலகங்களும் பூட்டப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிதிநிறுவனத்துக்கு சென்ற வாடிக்கையாளா்கள் அதிா்ச்சியடைந்து உரிமையாளரை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயற்சித்தனா். ஆனால், உரிமையாளா் பிரபு மற்றும் பணியாளா்கள் யாரையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். பிரபு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 30-க்கும் மேற்பட்ட வாடிகையாளா்கள் வையம்பட்டி காவல்நிலையத்தில் புகாா் அளிக்க சென்றனா். ஆனால், மோசடி செய்யப்பட்ட தொகை கோடிக் கணக்கில் இருப்பதால், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வாடிக்கையாளா்கள் புகாா் அளிக்க அறிவுறுத்தப்பட்டனா்.

இந்நிலையில் புதன்கிழமை நிதிநிறுவனத்துக்கு வந்த மேலும் சிலரும், தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று புகாா் அளித்தனா்.

கோடிக்கணக்கில் மோசடி: இதேபோல், நிறுவனத்தின் 5 கிளைகள் தொடா்பாக நூற்றுக்கணக்கான புகாா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்படி, மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை இதுவரையில் சுமாா் ரூ. 5 கோடி இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.