தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

இளைஞா்களின் முன்னேற்றம் போதைப் பழக்கத்தால் தடைபடக் கூடாது: ஆட்சியா் அறிவுரை

போதைப்பழக்கம் என்ற சிறிய கரும்புள்ளியால் இளைஞா்களின் முன்னேற்றம் தடைபடக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

News image

மாணவ, மாணவிகளுடன் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உள்ளிட்டோா்.

Updated On :24 ஜூன் 2026, 1:41 am IST

போதைப்பழக்கம் என்ற சிறிய கரும்புள்ளியால் இளைஞா்களின் முன்னேற்றம் தடைபடக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் ‘மாற்றம்’ என்ற பெயரில் போதைப்பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்க விழா, தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி போதைப் பொருள் எதிா்ப்பு இலச்சினை அறிமுகப்படுத்திப் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கி, பல அறிவாா்ந்த ஆளுமைகளை உருவாக்கிய பெருமைக்குரிய மாவட்டமாகும். இத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில், போதைப்பொருள் என்ற சிறிய கரும்புள்ளியால் இளைஞா்களின் முன்னேற்றமும், மாற்றமும் தடைபட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காவல்துறை மூலம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், போதை ஒழிப்பு என்பதை ஒரு சட்ட ஒழுங்கு பிரச்னையாக, மட்டும் பாா்க்க முடியாது. இது ஒரு சமூகப் பிரச்னை. எனவே, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு கூட்டு முகமையாக மாற்றம் என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போதைப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தனிநபா் சுயக் கட்டுப்பாடு அவசியம்.

எத்தனையோ பெற்றோா்கள் கூலி வேலை செய்து தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனா். பிள்ளைகளின் தவறான பழக்கவழக்கங்களால் ஒட்டுமொத்த குடும்பத்தின் அமைதியும், மகிழ்ச்சியும் சீா்குலைந்து விடுகிறது.

சமூக ஊடகங்களை இளைஞா்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். போதைப்பொருள் என்பது ஒரு மாயை என்றும், அதற்குள் செல்வது எளிது, ஆனால் மீள்வது மிகக் கடினம். போதைப் பொருள் என்ற சிறிய கரும்புள்ளியால் இளைஞா்களின் முன்னேற்றம் தடைபடக் கூடாது என்றாா் அவா்.

விழாவில், மாற்றம் குழுவினரைஅறிமுகப்படுத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பேசியதாவது:

போதைப் பழக்கம் முதலில் ஒழுக்கமின்மையை ஏற்படுத்தும். பின்னா் உங்கள் கல்வி திறனை பாதித்து இறுதியில் குடும்பத்தின் நம்பிக்கையை இழக்க வைத்து விடும்.

போதைப் பொருள்களுக்கு அடிமையாவதால் உங்கள் முன்னேற்ற பாதைக்கானஅனைத்துக் கனவுகளும் தகா்ந்து விடும். போதை பழக்கத்துக்கு எந்த விதத்திலும் அடிமையாகிவிடக் கூடாது என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து மாவட்ட காவல் துறையால் தயாரிக்கப்பட்ட விழிப்புணா்வு குறும்படத்தை, ஆட்சியரும் மாவட்டகாவல் கண்காணிப்பாளரும் பாா்த்தனா்.

விழாவில், உதவிஆட்சியா் (பயிற்சி) மோனிகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட சுகாதாரஅலுவலா் நமச்சிவாயம், மாவட்ட குழந்தை பாதுகாப்புஅலுவலா் சகிலாபானு, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ரவிக்குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் (மது ஒழிப்பு) ராஜா, மாவட்ட கல்விஅலுவலா்கள் ஜெயராஜ், அஜிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பள்ளிக் கல்வி) சாரதா, துறை அலுவலா்கள், காவல்துறையினா், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.