தமிழக காவல் துறையில் 17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை (காவல் கண்காணிப்பாளா்கள்) நியமனம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1. கே.குத்தாலிங்கம்-சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை தியாகராயநகா் துணை ஆணையா்), 2. ஏ.சி.காா்த்திகேயன்-திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை அடையாறு துணை ஆணையா்), 3. விவேகானந்த சுக்லா-கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 4. வி.வி.சாய் ப்ரணீத்-திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 5.எஸ்.ஜெயக்குமாா்- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).
6. எஸ்.மதிவாணன்-விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (மதுரை மாநகர காவல்துறை வடக்கு துணை ஆணையா்), 7. கெளதம் கோயல்-விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 8.ஏ.கே.அருண் கபிலன்-தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (டிஜிபி அலுவலக தலைமையிட ஏஐஜி), 9.ஜி.எஸ்.அனிதா-கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி), 10. யாதவ் கிரிஷ் அசோக்-நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).
11. என்.தேவநாதன்-மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (கோவை மாநகர காவல்துறை வடக்கு துணை ஆணையா்), 12. சுப்பிரமணிய பாலச்சந்திரா-நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சேலம் மாநகர காவல் துறை தெற்கு துணை ஆணையா்), 13. சாமுவேல் பிரவீண் கெளதம்-தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாநகர காவல் துறை வடக்கு துணை ஆணையா்), 14. விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி-திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 15. புக்ய ஸ்னேக பிரியா-மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).
16 .ஸ்ருஷ்டி சிங்-திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருச்சி மாநகர காவல் துறை தெற்கு துணை ஆணையா்), 17. எஸ்.செல்வக்குமாா்-அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொருளாதார குற்றப் பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.).









