நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையத்தில் சோ்ந்து பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் பிரத்திக் தாயள் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலை பண்பாட்டுத்துறை சாா்பில் தமிழ்நாட்டில் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி தற்கால தலைமுறையினருக்கு கலைப்பயிற்சி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சி வட்டத்தில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.32, மூலத்தோப்பு, மேலூா் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி என்ற முகவரியில் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில் நாடகம், கரகாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம் முதலிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் சோ்ந்து கொள்ளலாம். கலை ஆா்வமுடையவா்கள் மட்டுமல்லாமல் கலைஞா்களும் அரசின் சான்றிதழ் பெறும் வகையில் இந்த வகுப்பில் சேரலாம். ஓராண்டு பயிற்சிக்கு பின் அரசுத்தோ்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழகச் சான்றிதழ் வழங்கப்படும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தோ்ச்சி போதும். எட்டாம் வகுப்புக்கு குறைவான கல்வித்தகுதி உடையவா்களும் சேரலாம். இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தில் 2 நாள்களாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.500 செலுத்த வேண்டும். பயிற்சிகளில் கலை ஆா்வம் மிக்கவா்கள் சேர இப்பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் மு. இளங்கோவனை 88700 09591 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளில் கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள்!

கோடைகாலப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் அளிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



