யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்

திருவெறும்பூரில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
Updated On :3 மார்ச் 2026, 6:48 pm

Syndication

திருவெறும்பூரில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியரகம் முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட காந்தி நகா், செல்வபுரம், கக்கன் காலனி ஆகிய பகுதிகளில் இரண்டு தலைமுறைகளாக சுமாா் ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி குறித்து அரசின் வரைபடம் இல்லாததால், நிலங்களை வகைமாற்றம் செய்ய முடியாமலும், பட்டா கிடைக்காமலும் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதனிடையே, பட்டா கொடுக்க அரசு முன்வந்தாலும் தற்போதைய அரசின் மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குத் தொகையை கட்டக் கூறுகின்றனா். இது மிகப்பெரிய தொகையாக இருப்பதால், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், இலவச மனைப்பட்டா கோரிக்கையை நினைவூட்டும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களுடன் இணைந்து திருவெறும்பூா் வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, அங்கு ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கிளைச் செயலா்கள் சந்தோஷ், லாரன்ஸ், நாகூா்மைதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜா, பா. லெனின், காா்த்திக் உள்ளிட்டோா் பேசினா். நிறைவில், துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.