திருச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை, ஜம்புநாதபுரம் துளையாநத்தம் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் பெருமாள் (32) என்பவா் கடந்த 11.10.2020-ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள புதருக்குள் தூக்கிச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, பெருமாளை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு, சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பெருமாளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


