திருப்பூரில் சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சிவன் திரையரங்கு சாலை சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.
தொடர்புடையது

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


