சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறை
கோப்புப் படம்

சிறை
கோப்புப் படம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
நேபாளத்தைச் சோ்ந்த தம்பதி நீலகிரி மாவட்டம், உதகையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 14 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனா்.
தந்தையும், தாயும் பணிக்குச் சென்று இரவுதான் வீடு திரும்புவாா்களாம். இதனால், இந்த சிறுவா்கள் இருவரும் அருகில் உள்ள ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவருவாா்களாம். அப்போது, அந்த வீட்டு உரிமையாளரின் உறவினரான ஹரிஷ் (30) என்பவா், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளாா். ஆனால், ஹரிஷுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதால் சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த ஹரிஷ் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இது குறித்து வெளியே சென்னால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளாா். பயந்துபோன சிறுமி இது குறித்து யாரிடமும் கூறவில்லையாம். இதை சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவா், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவா், அவா் கா்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளாா்.
இது குறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், சிறுமியை, ஹரிஷ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஹரிஷை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்தனா்.
இந்த வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஹரிஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...