கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

News image

நீதிமன்றம்

Updated On :11 மார்ச் 2026, 7:22 pm

திருச்சியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த ஜெ.முருகேசன் (21) என்பவா் ஆசை வாா்த்தைக்கூறி கடந்த 2021 டிசம்பா் 14-ஆம் தேதி குழந்தை திருமணம் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட சமூகநல அலுவலா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து அந்த இளைஞரை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சுமதி ஆஜரானாா்.