வீழ்ந்துகொண்டே செல்லும் ரூபாய் மதிப்பு! 1 டாலர் - ரூ. 94.78! 7 காசுகள் சரிந்தது!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95 என்ற அளவை கடந்த பிறகு, இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.78ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
மும்பை: ஈரானியப் போர் பதற்றம் அதிகரித்ததால் உலகச் சந்தைகள் அதிர்ச்சிக்குள்ளாகி, ரூபாயின் மதிப்பில் பெரும் ஏற்ற இறக்கத்தையும் சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.95 என்ற அளவை கடந்த, இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.78 ஆக நிலைபெற்றது.
மேற்கு ஆசிய நெருக்கடி 31வது நாளாகத் தொடர்வதால், கச்சா எண்ணெய் விலை அதீத உயர்வு நீடித்திருக்கும் நிச்சயமற்ற நிலையில், அந்நிய செலவானி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் ஏற்ற இறக்கம் காணப்பட்டதால், வர்த்தகத்தின் போது அதன் மதிப்பு 165 காசுகள் வரை ஊசலாடியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.62 என்ற அளவில் தொடங்கி, பிறகு வர்த்தகத்தின் இடையே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து ரூ.95.22 என்ற வரலாற்றில் மிகக் குறைந்த அளவை எட்டியது. வர்த்தகம் நிறைவடையும் போது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.94.78ஆக நிலைபெற்று, கடந்த நாள் வர்த்தக முடிவான ரூ.94.85ஐ விட இது 7 காசுகள் கூடுதலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...