மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...

News image

சீமான் வேட்புமனு தாக்கல் - X

Updated On :30 மார்ச் 2026, 1:22 pm IST

காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியுள்ளது.

நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் ஆகியோரைத் தொடர்ந்து காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் வேட்பாளருமான சீமான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தன்னுடைய தாய் மற்றும் மனைவியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் பிரபு போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

NTK Chief Ministerial Candidate Seeman Files Nomination in karaikudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.