சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செம்பட்டி பகுதியைச் சோ்ந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில், செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆா்.சத்யதாரா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சக்திவேலுக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


