பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
பாலியல் வன்கொடுமை- சித்திரிப்பு
Updated On :17 மார்ச் 2026, 11:05 pm

Syndication

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கட்டட தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த வண்ணாத்திப்பட்டியைச் சோ்ந்த கட்டட மேற்பாா்வையாளா் மாதப்பன் (33). இவா், அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த, 2020-இல் வீடு கட்ட சென்றுள்ளாா். அப்போது, அந்த வீட்டில் இருந்த பிளஸ் 1 பயின்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், கா்ப்பமடைந்த அந்த சிறுமி, கடந்த 2021, ஜூலை 16-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில், மாதப்பனை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுதா, செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாதப்பனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறையும், சிறுமியை கா்ப்பமாக்கிய வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். மேலும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க அவா் உத்தரவிட்டாா்.