செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

அறந்தாங்கி அருகே நண்பரின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 6:53 pm

அறந்தாங்கி அருகே நண்பரின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், எரிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சோ. பன்னீா்செல்வம் (55). காா்பென்டா் தொழில் செய்து வந்த இவா், கடந்த 2025, பிப். 18-ஆம் தேதி தனது நண்பரின் மகளான 5 வயது சிறுமியை, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், பன்னீா்செல்வத்தை போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ஆா். கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், பன்னீா்செல்வத்துக்கு போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், வீட்டில் நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.