மோடியும் அமித்ஷாவும் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் திமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டேதான் போகும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் இன்று (ஏப். 2) தெரிவித்தார்.
கோவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (எப். 2) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது; புறக்கணிக்கிறது. கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதை பாஜக அரசு தடுக்கிறது.
16 லட்சம் மக்கள் உள்ள ஆக்ராவுக்கு மெட்ரோ திட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பாட்னா, போபால் நகரங்களில் மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரைக்கு மறுப்பதற்கான காரணம் என்ன? அவை தமிழ்நாட்டில் இருப்பதால்தான்.
பாஜகவுக்கு வாக்களிக்காதது பாவச்செயலா? ஏன் தமிழ்நாட்டை பாஜக புறக்கணிக்கிறது. தேர்தலின்போது மட்டும் பாஜகவுக்கு தமிழ்நாடு நினைவுக்கு வருகிறது.
பட்ஜெட் தயாரிப்பிலோ, பேரிடர் நிவாரண நிதி பகிர்விலோ பாஜகவுக்கு தமிழ்நாடு நினைவில் வராது. அதனால்தான், தமிழக மக்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும்போது பாஜக நினைவுக்கு வராது.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை. 2016 தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு பழனிசாமியால் பேச முடியுமா? பெண்களின் பாதுகாப்பு வாகனம், திமுக திட்டங்களில் ஒன்றான பிங்க் ரோந்து வாகனம்.
மோடி தமிழகம் வந்தால் தமிழ் மீது பாசம் கொண்டதைப்போன்று நடிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் பிகார் மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர் என பிரதமர் மோடி வடமாநில பிரசாரங்களில் பேசுகிறார். இதனை தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்ளும்போது மோடியால் பேச முடியுமா?
தமிழ்நாட்டில் அனைத்து மாநில மக்களும் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் மண்ணில் உள்ளவர்கள் குறித்து அபாண்டமாக மோடி பொய் கூறுகிறார். தமிழ் மீது இயல்பிலேயே வெறுப்பு ஊறியவர்களாக பாஜகவினர் உள்ளனர்.
கடந்த முறை 2024 தேர்தலின்போது சென்னையில் சாலைவலம் நடத்தினார் மோடி. அதனால், 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
இந்தமுறை அவர் வந்தால் நமது இலக்கான 200 தொகுதிக்கான வெற்றி உறுதியாகிவிடும். மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் நமது வெற்றி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் போகும்.
இந்த முறை 10க்கு 10 வெற்றியை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வழங்க வேண்டும். இந்த வாக்குகள் ஒரு கூட்டணிக்கானது மட்டும் அல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்கானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது. அத்தகைய கட்சிக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும்'' என முதல்வர் பேசினார்.
Summary
No matter how many times Modi Amit Shah visit DMK victory is certain M.K. Stalin campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


