தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 2019-ஆம் ஆண்டிலிருந்து 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் எனத் தொடர்ந்து பங்கெடுத்து வரும் தோழமைக் கட்சியின் மதிப்புக்குரிய தலைவர்கள் – நிர்வாகிகள் - தொண்டர்கள் அனைவருக்கும் திமுகவின் தலைவர் என்ற முறையில் என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணைந்து, மாநில நலனுக்கான குரலை ஓங்கி ஒலித்ததையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணியில் பங்கெடுத்துத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், போட்டியிட முடியாமல் போன - போட்டியிட விருப்பமில்லாத -தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சிகள் - இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், தேர்தல் களத்தில் வழங்கிய ஒத்துழைப்பையும் என்றும் மறக்க மாட்டேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி எம்எல்ஏ, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ், எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் வி.எம்.எஸ். முகமது முபாரக், தமிழ்த்தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார், கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குவதுடன், தேர்தல் களம் காணாத நிலையிலும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தலைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
93 வயதிலும் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பிரசாரம் மேற்கொண்ட, நம் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, போட்டியிடத் தொகுதிகள் தேவையில்லை; திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியே குறிக்கோள் என நேரில் தெரிவித்துப் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன். குமார், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல் ராஜன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் கே.எஸ். ராஜ்குமார், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு. ஜக்கையன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய வல்லரசு பார்வர்டு ப்ளாக் நிறுவனத் தலைவர் பி.என். அம்மாசி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செலயாளர் சுப. வீரபாண்டியன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடுகள், ஒப்பந்தங்கள், பரப்புரைப் பணிகள் அனைத்திற்கும் பொறுப்பினை ஏற்று, செயல்பட்டவன் என்ற முறையில், தேர்தல் அரசியல் களத்திற்கேயுரிய தன்மையினால் எந்தவொரு கட்சித் தலைவருக்கோ, அதன் நிர்வாகிகளுக்கோ சிறிதளவு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கும் பொறுப்பானவனாக என் வருத்தத்தையும் பதிவு செய்து, தங்கள் அனைவரின் உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும், மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், வலிமை குன்றாத வகையில் 1 கோடியே
54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைப் பெற்று,
72 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பாலான தோழமைக் கட்சிகள் கொள்கைத் தோழமையுணர்வு மாறாமல், திமுகவுடன் தொடர்ந்து பயணிப்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது கழகத்தின் மீது தோழமைக் கட்சித் தலைவர்கள் வைத்துள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ப, நாம் கொள்கை உறுதிமிக்க அரசியல் கட்சிகளாக ஒன்றுபட்டு நின்று, மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நம் பயணத்தை எப்போதும் போல தொடர்ந்து மேற்கொள்வோம். தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
Summary
Strength and fighting spirit are intrinsic to us: M.K. Stalin thanks alliance partners.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தோ்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்
இது சட்டப்பேரவையா? சினிமா தியேட்டரா? உதயநிதி கேள்வி

கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


