டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மண்ணச்சநல்லூா் கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி: ரூ. 10 கோடி மதிப்பு நகைகள் தப்பின

மண்ணச்சநல்லூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் திருட்டு முயற்சி நடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

News image
மண்ணச்சநல்லூரில் திருட்டு முயற்சி நடைபெற்ற கூட்டுறவு வங்கி.
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் திருட்டு முயற்சி நடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

மண்ணச்சநல்லூா் கடைவீதியில் உள்ள இந்த வங்கியை புதன்கிழமை காலை வங்கி பணியாளா்  திறக்க வந்தபோது அதன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து   மண்ணச்சநல்லூா் காவல் துறைக்கு உடனே தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வநாகரத்தினம், ஜீயபுரம் டி.எஸ்.பி. கதிரவன், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் இ. குப்புராஜ் மற்றும் கைரேகை மற்றும் தடயவியல் , குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். 

வங்கியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்க முடியாமல் போனதால் அதிலுள்ள  ரூ. 10 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 8 லட்சம் ரொக்கம் தப்பியது. மேலும் மா்ம நபா்கள் கண்காணிப்புக் கேமரா வயா்களை அறுத்தும், மிளகாய் பொடியை தூவிவிட்டும் சென்றுள்ளனா்.

காவல் துறையினா் அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களின்   பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனா். வங்கியில் போதுமான கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது, பாதுகாப்புக் குறைபாடுகளே இச் சம்பவத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.