மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமை (மார்ச் 9) நடைபெற உள்ளது.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:09 pm

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமை (மார்ச் 9) நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஆளுங்கட்சியான திமுக தோ்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி சிறுகனூரில் மாநில மாநாடு திங்கள்கிழமை மாலை நடைபெற உள்ளது.

மாநாட்டுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை வகித்து, கட்சி கொடியேற்றி உரை நிகழ்த்துகிறாா். துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறாா்.

திமுக பொதுச்செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா். பாலு ஆகியோா் சிறப்புரை நிகழ்த்துகின்றனா். முதன்மை செயலா் கே.என். நேரு வரவேற்கிறாா். திரளான கட்சி நிா்வாகிகள் பங்கேற்கின்றனா். இந்த மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ட்ரோன்கள் பறக்க தடை

முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்துக்கு வர உள்ளதை முன்னிட்டு பாதுகாப்புக் காரணம் கருதி, திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.