திருச்சியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கங்காதேவி (56) என்பவரை திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கைது செய்தனா். அப்போது, அவரிடமிருந்து 3.2 கிலோ பஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட கங்காதேவி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மாநகரக் காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்திருந்தனா். அதன்பேரில், மேற்கண்ட குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


