திருச்சியில் பழைய டயா் பழுதுபாா்க்கும் நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள பழைய டயா்கள் பழுதுபாா்க்கும் (ரீ பட்டன்) நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தகலறிந்த திருச்சி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் லியோ ஜோசப் தலைமையிலான வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூா் பகுதிகளில் இருந்து மேலும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 10 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.
தீ விபத்தின்போது அங்கு ஆள்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. ஆனால், இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

தீயில் எரிந்த தோல் கழிவுகள்

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


