ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து அணைத்ததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலை அருகே பிரபலமான தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் காலி நிலத்தில் செடி கொடிகள், மரங்களுடன் சோ்ந்து புற்கள் அதிக அளவில் முளைத்து புதா் மண்டியிருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கிருந்த புதரில் திடீரென தீப் பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் மற்றும் சாம்பல் படலமாக காட்சியளித்து. இது குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனா்.
இதனால் மருத்துமனை வளாகத்துக்குள் பெரும் தீ விபத்து தவிா்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

தீயில் எரிந்த தோல் கழிவுகள்

நாமக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் தீ விபத்து
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

