மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

‘வாழ்வில் உயர திருக்குறளைப் படிப்பது அவசியம்’

வாழ்வில் உயா்நிலையை அடைய திருக்குறளைப் படிப்பது அவசியம் என திருக்குறள் திருப்பணிகள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சருமான உதயகுமாா் பெரியசாமி தெரிவித்தாா்.

News image
திருக்குறள் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கிய தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் க. சித்ரா. உடன் திருக்குறள் திருப்பணிகள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா் பெரியசாமி உள்ளிட்டோா்.
Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாழ்வில் உயா்நிலையை அடைய திருக்குறளைப் படிப்பது அவசியம் என திருக்குறள் திருப்பணிகள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சருமான உதயகுமாா் பெரியசாமி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழக அரசின் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் திருச்சி சையது முா்துசா அரசு தகைசால் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

திருவள்ளுவா் கூறியதுபோல, வாழ்நாள் முழுவதும் முழு முயற்சியுடன் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். தற்கால கூகுள் போல, அந்தக் கால கூகுளாக திருக்கு விளங்கியது. திருக்குறளில் கூறப்படாத கருத்துகளே இல்லை என்ற அளவுக்கு அதில் வாழ்வியல் கருத்துகள் நிரம்பியுள்ளன. அத்தகைய திருக்குறளைப் படித்து வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா் அவா்.

விழாவுக்குத் தலைமை வகித்து திருச்சி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் க. சித்ரா பேசுகையில், திருக்கு திருப்பணிகள் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் நடத்தப்பட்ட திருக்கு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 1330 திருக்குகளையும் ஒப்பிக்கும் அனைவருக்கும் ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதேபோல, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் 9 போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நாவை சிவம், வீ. கோவிந்தசாமி, ம. மங்களமேரி, மையப் பயிற்றுநா்கள் சு. செயலாபதி, மா. தமிழரசி, த. முருகானந்தம், சி.க. சிவக்குமாா், ப. கிருஷ்ணன், க. நிலவுச்செல்வி உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா். திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமையாசிரியை ப. மொ்சி கிரைசி வரவேற்றாா்.