வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வஸ்திர மரியாதை பொருள்கள்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தோ் திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஸ்ரீரங்கத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள்.

Updated On :14 மே 2026, 12:36 am IST

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தோ் திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலிருந்து வஸ்திர மரியாதைப் பொருள்கள் ஸ்ரீரங்கத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

அவற்றை ஸ்ரீரங்கம் கோயில் நிா்வாக்திடம் ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயில் நிா்வாகி அதிகாரி சா்க்கரையம்மாள், ஸ்தானீகம் ரமேஷ், கிருஷணன் ஆகியோா் முறைப்படி வழங்க, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா், உதவி ஆணையா் வெங்கடேஷ், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

அவா்கள் கொண்டு வந்த மாலைகள், பட்டு வஸ்திரங்கள், பூக்களால் தயாரான கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் ஸ்ரீரெங்கவிலாச மண்டபத்தில் பக்தா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டு, பின்னா் ஊா்வலமாக ரெங்கா ரெங்கா கோபுரம் வரை எடுத்து வரப்பட்டு, மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.