திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 119 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்று மாநில அளவில் அரசுப் பள்ளிகள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 446 பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 99, ஆதிதிராவிட நலப் பள்ளிகள் 16, பழங்குடியினா் நலப் பள்ளிகள் 3, சமூகநலத் துறைப் பள்ளி 1, அரசு உதவிபெறும் பள்ளிகள் 15, அரசு பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள் 26, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 3, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 79, சுயநிதி பள்ளிகள் 5 என மொத்தம் 247 பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சிப் பெற்றுள்ளது.
மாநில அளவில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள் பிரிவில் திருச்சி மாவட்டம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 251 பள்ளிகளுடன் கோவை மாவட்டம் முதலிடத்தையும், 241 பள்ளிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
அரசுப் பள்ளிகள் பிரிவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 224 பள்ளிகளில் 119 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள் பிரிவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்த இடத்தில் 116 பள்ளிகளுடன் தஞ்சாவூா் மாவட்டம் இரண்டாவது இடத்திலும், 94 பள்ளிகளுடன் புதுக்கோட்டை மாவட்டம் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு; சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.20% தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் முதலிடம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



