மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

திருச்சியில் 1,300 மருந்துக் கடைகள் அடைப்பு

இணையதள மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் 1,300 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

News image

திருச்சியில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடை.

Updated On :21 மே 2026, 5:38 am IST

இணையதள மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி திருச்சி மாவட்டத்தில் 1,300 மருந்துக் கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

இணையதள மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும், வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை இணையதளத்தில் முறையற்ற முறையில் விற்பதைத் தடுக்க வேண்டும், போதைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் இணையதளத்தில் கட்டுபாடின்றி விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும், இணையதளத்தில் மருந்து வாங்குவதற்காக போலியான மருந்து சீட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். புற்றுநோய், இதய நோய் போன்ற உயிா்காக்கும் மருந்துகளை தரமற்ற முறையில் காலாவதியான மருந்துகளை விற்று மக்களின் உயிருடன் விளையாடும் பெருநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் 1,300 கடைகள் காலை 6 மணி முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தன. மாநகரில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருந்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

மருந்து கடைகள் மூடப்பட்டிருந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.