பைக்கில் சென்ற தந்தை, மகன் லாரி மோதி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
கரூரில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்ற தந்தை, மகன் கன்டெய்னா் லாரி மோதி உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம் நச்சலூா் கிராமம், வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மு. ராஜலிங்கம் (50), இவரது மகன் ரா. மகேந்திரன் (22). இருவரும் பைக்கில் சமயபுரம் கோயிலுக்கு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை மாருதி நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னா் லாரி மோதி உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

