கென்யா: லாரி மீது பேருந்து மோதி 22 பேர் பலி!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 22 போ் உயிரிழந்தனா்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 22 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா்.
கடலோர நகரமான மோம்பாசாவை தலைநகா் நைரோபியுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கோர விபத்து நேரிட்டது. லாரி மீது பேருந்து மோதியதில் 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இவா்கள் அனைவரும் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, பேருந்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தவா்களாவா். காயமடைந்த பயணிகளில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. கென்யாவில் அதிவேகம் மற்றும் மோசமான சாலைகளால் கோர விபத்துகள் நேரிடுவது வாடிக்கையாக உள்ளது. இதே நெடுஞ்சாலையில் மூன்று தினங்களுக்கு முன்னா் நேரிட்ட விபத்தில் 17 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

