விக்கிரவாண்டி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
விக்கிரவாண்டி அருகே முன்னால் சென்ற மீன் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் சேதமடைந்த கார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்னால் சென்ற மீன் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி தங்கபாய் (60). இவரின் மகன் ஜான் பிரிட்டோ (33) ஐ.டி. நிறுவன ஊழியர், மகள் லதா கிருஷ்டி, மருமகன் ராஜ்குமார், இவரது மகள்கள் எவர்ஜெலின் (10),ஜெசலா (7).
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 6 பேரும் ஒருகாரில் தூத்துக்குடியிலிருந்து - சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ராஜ்குமார் ஓட்டினார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி. சாலை அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மீன் லாரி மீது கார்மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் காயமடைந்தனர். இதில், தங்கபாய், ஜான்பிரிட்டோ, சிறுமி எவர்ஜெலின் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டிய ராஜ்குமார், இவரின் மனைவி லதா கிருஷ்டி, சிறுமி ஜெசலனா ஆகியோர் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், பேத்தி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Three people were killed when a car crashed into a fish truck in front of them near Vikravandi in Villupuram district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

